Thursday, October 16, 2008

காசி யாத்திரை

காசி யாத்திரை:

நாங்கள் சென்ற மாதம் காசி யாத்திரை சென்று வந்தோம்.அப்போது கயா ,அலஹபத் மற்றும் காசி சென்று வந்தோம்.முன்னதாகவே ரயில் டிக்கெட்டும் தங்க இட வசதிக்கும் ஏற்பாடு செய்துக்கொண்டு பயணம் புறப்பட்டோம்.

காசியில் 2 நாட்கள் தங்கி கங்கையில் புனித் நீராடி விஸ்வநாததர்,விசாலக்ஷி, அன்னாபூரணி,அனுமன் முதலிய சாமி வணங்கி வந்தோம.கயாவிலும அலஹபாதிலும் நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தங்கினோம்.காசியில் குமரகுருபரர் மடத்தில் தங்கினோம்.கயாவிலும அலஹபாதிலும நாட்டுக்கோட்டை சத்திரத்தில் நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு கிடைத்தது . கோவிலுக்கும் சங்கமத்திற்கு செல்வதற்கும தம்பதி பூஜை செய்வதகும் வண்டி வசதியும் போட் வசதியும் செய்து கொடுத்தார்கள்.

காசியில் குமரகுருபரர் மடம கேதார்நாத் படித்துரைக்கு அருகில் உள்ளது. படித்துரைக்கு போகும் பாதையில் கேதாரீஸ்வர கோவில் உள்ளது்.
மடத்துக்கு எதிரில் உள்ள உணவகத்தில் நமது உணவு கிடைக்கிறது. பக்கத்தில் உள்ள ஹனுமான் கட்டிற்கு சென்று ரிகஷா பிடித்து விஸ்வநாததர், விசாலக்ஷி, அன்னாபூரணி கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வணங்கி வந்தோம் . விசவநாதர் கோவிலில் போலீஸ் கெடுபிடி அதிகம் உள்ளது.மற்றபடி கோவில் செல்ல எந்த சிரமமும் இல்லை.

படகில் கங்கையில் சென்று அனைத்து படிதுறைகளை யும் ஆற்றின் கரைகளில உள்ள கோவில்களையும் பார்த்து வந்தோம்.   படகுகாரர்களும் பயமில்லாமல் நம்மை எல்லா இடங்களையும் காண்பிக்கிறார்கள். கடைசி நாள் கால பயிரவர் கோவிலுக்கு சென்ற காசி கயிறு வாங்கி வந்தோம்.ஒரு நாள் புது விஸ்வநாதர்
( பிர்லா மந்திர்) கோவிலுக்கு வந்தோம்.துர்கா கோவில, மனாஸ் கோவில, ஹனுமான் கோயில, பிந்து மாதவர் கோயில் சென்று கடவுளை வணங்கி வணங்கி வந்தோம் .

எல்லா ஊரிலும் அனைத்து வயதினரும் தமிழ் நாட்டு மக்களை பார்த்தோம். எல்லா ஊரிலும் கடைக்காரர்கள் தமிழ் பேசுகிறார்கள் . தமிழ் நாட்டு உணவும் கிடைக்கிறது. எனவே எந்த சிரமமும் இல்லாமல் சென்று வந்தோம.காசி பயணத்தின் பொழுது புத்த கயா மற்றும் சாரநாத் சென்று வரலாம்.

1 comment:

  1. Sir,

    Please suggest a reliable Pooja person at Gaya for a Darpana / Sirartha Pooja in your blog for the benefit of many Darpana / Sirartha Pooja Performers. Also, kindly inform the necessary things to be carried from home for the Darpana / Sirartha Pooja. Please suggest the expert who can furnish info in this regard in Chennai.

    Your article / blog expresses your talent of writing travalogue, excellent pre planning!

    Best wishes!

    ReplyDelete