Sunday, October 11, 2009

பார்க்க வேண்டிய இடங்கள்.

அலகாபாத்.

அலகாபாத்தில் நாட்டுக்கோட்டை நகர சத்திரம் வசதியுடன் உள்ள தங்குமிடமாகும். நல்ல தமிழ் நாட்டு சாப்பாடும் சங்கமம் சென்று வர வசதியும் செய்து தருகிறார்கள்.பெட்டிகளை அங்கு வைத்துவிட்டு காபி அருந்திவிட்டு சங்கமம் செல்லலாம்

அலகாபாத்தில் மிகவும் முக்கியமானது திரிவேணி சங்கமம் ஆகும்.கங்கை,யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகள் சேரும் இடம் சங்கமம் ஆகும்.சங்கமத்துக்கு செல்ல, யமுனை நதியின் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் படகில் வேண்டும்.கங்கை நீர் செம்மண் நிறத்திலும் யமுனை நீர் நீல நிறத்திலும் கலப்பதை காணலாம். அங்கு ஆற்றில் இறங்கி குளித்து விட்டு சிராத்த காரியங்களை செய்யவேண்டும்.திரும்பி வரும்போது படகில் இருந்தபடியே கங்கையில் தண்ணீரை பாட்டிலில் எடுத்து வர வேண்டும்.அதுவே கங்கா தீர்த்தமாகும்.

கரையில் தெரியும் பெரிய கோட்டை அக்பர் கட்டிய கோட்டையாகும். அதனுள் ஒரு ஆல மரம் உள்ளது அது அட்சயவடம் என்று அழைக்கபடுகிறது. அங்கு ஒரு பாதாள கோயில் உள்ளது. இங்கு ஆதிகேசவன் ( பாம்பின்) சிலை இருக்கிறது.வரும் வழியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.15 அடி நீளத்தில் அங்கு ஆஞ்சநேயர் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் சங்கர விமான மண்டபம் உள்ளது.காஞ்சி மடத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அடுத்தது தாரகஞ்சிலுள்ள வேணி மாதவர் ஆலயம். இங்கு மாதவரும்,திருவேணியும் இருக்கிறார்கள். அடுத்தது சர்ப்பராஜா எனப்படும் வாசுகி ஆலயம். இது நாகபாசு எனப்படும் இடத்தில கங்கை கரையில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு முன்புறமுள்ள மண்டபத்தில் பீஷ்மரின் பிரமாண்ட சிலை உள்ளது.

நேருவின் பிறந்த வீடான ஆனந்தபவனும், பழம் பொருள் காட்சியகமும், பிர்லா கோவிலும் மற்ற பார்க்க வேண்டிய இடங்கள்.

காசி


காசியில் நாம் பார்க்க பல இடங்கள் உள்ளன.சுமார் ஒரு வாரம் தங்கி பார்க்கவேண்டும்.
நாம் தங்க பல நல்ல சத்திரங்கள் உள்ளன.விஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள கோடோவ்லியாவில் உள்ள நாட்டுக்கோட்டை நகர சத்திரமும் , கேதார் படித்துறை அருகில் ஸோனார்புராவில் உள்ள ஸ்ரீ குமாரசாமி மடமும் மிகவும் வசதியான இடங்களாகும். முன் கூட்டியே தொடர்பு கொண்டு அறையை பதிவு செய்து கொள்ளலாம். நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு கிடைக்கும்.

காசியில் முதலில் கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாஷியையும், அன்னபூரணியையும் தரிசிப்பதே அனைவரின் நோக்கமாகும்.விஸ்வநாதருக்கு இரண்டு கால புஜை நாட்டு கோட்டை சத்திரத்தாரால் நடத்தப்படுகிறது. விசாலாஷி கோவில் மற்றும் கேதாரீஸ்வர் கோவில் குமாரசாமி மடத்தின் கண்காணிப்பில் உள்ளது.

கேதரீஸ்வரர் கோவில்- கேதார் படித்துறையில் குமாரசாமி மடத்துக்கு அருகில் உள்ளது. இங்கு நாமே கங்கா தீரத்தை கொண்டு வந்து சாமியை அபிஷேகம் செய்யலாம்.

துண்டி விநாயகர் கோயில் கடைதெருவில் உள்ளது. பஞ்சகங்கா கட்டத்தில் பிந்து மாதவர் கோவில் உள்ளது.தசாவமேத படித்துறை அருகில் உள்ள வராகி கோவிலுக்கு காலை ஐந்து மணிக்குள் செல்லவேண்டும்.மேல்தளத்திலிருந்து கீழேயுள்ள பாதங்களை மட்டும் தரிசிக்கலாம்.


காசி பல்கலை கழகம் போகும் வழியில் அனுமன் ஆலயம் உள்ளது. இதன் அருகில் குரங்கு கோவில் எனப்படும் துர்க்கை கோவில் உள்ளது.காசி பாரத இந்து பல்கலைகழகத்துக்குள் உள்ள புது விஸ்வநாதர் ( பிர்லா ) கோவில் மதன் மோகன் மாளவியாவால் கட்டப்பட்ட மிகவும் அருமையான கோவில் ஆகும்.

துளசி மனாசு கோவில் ராமாயணம் எழுதிய துளசி தாசரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. மாடர்ன் முறையில் ராமாயண காட்சிகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன.கால பைரவர் கோவில் விஸ்வநாதர் கோவிலுக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு காசிகயிறு வாங்கிகொள்ளவேண்டும்

காசியில் கங்கை செம்பு, ருத்திராட்சம், ஸ்படிகமாலை, பூஜை தட்டு, பூஜை மணி, ஜப மாலை முதலிய பூஜை சாமான்களும், செப்பு கிண்ணங்களில் அடைக்கப்பட்ட காசி தீர்த்ததையும், விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி விக்கிரகங்களும், படங்களும் வாங்கலாம்.

Sweets




அந்த கால தீபாவளி நினைவுகள்

ஆகா! தீபாவளி என்றாலே எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகை நினைவுக்கு வருகிறது.அந்த காலத்தில் தீபாவளி என்பது நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து மகிழ்ச்சியை வெளிக்காட்டும் தினம் அது.